என்னுயிரே உன்னைத்தேடி நான்

இப்படி என்னைத் தவிக்கவிட்டு
எங்கு போனாய்யடா என்னவனே
கனவிலும் நனவிலும் நான்
கண்டதும் காண்பதும் நீயேயன்றி
வேறொருவரும் இல்லையடா
நனவில் நடமாடும்போதும் கூட
நான் காணும் பொருளிலெல்லாம்
உன் உயிர்மூச்சே நிறைந்திருக்க கண்டு
உந்தன் உயிரோடு என்றோ கலந்துவிட்டது
என்னுயிரும் ........
இன்று நீ காணவில்லை..... துடிக்குதடா
என் நெஞ்சு உயிரைத்தேடி .....அது
உன்னில் கலாதிருக்க .....
இங்கு நான் வெறும் ஜடமாய் இருக்க
வந்துவிடு என்னுயிரே என்னில்
கலந்துவிடு ...... மீண்டும்
நானும் நீயும் நாமாய் வாழ்ந்திடவே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (6-Dec-19, 3:30 pm)
பார்வை : 498

மேலே