ஐம்பதிலும் ஆசை வரும்

ஐம்பதிலும் ஆசை வரும்

இது நியாயமா!
நியாயம் தான்.
என்ன நியாயம்...
இதில் நியாயத்திற்கும்
அனியாயத்திற்கும் இடம் இல்லை .
என்ன வயசாச்சு நீங்க
என்னங்க....
அப்படி என்ன வயசாச்சு...
ஐம்பதில் ஆசை வராதா!
சும்மா இருங்க...
சும்மா இருக்க நான் என்ன முற்றும் துறந்தவனா!
நான் ஒன்னு சொன்னா
நீங்க ஒன்னு சொல்றீங்க....
அப்படி தான் சொல்லுவேன்
என் அழகியே
என் அற்புதமே
என் ஆனந்தமே
என் தங்கமே
போதும் போதும்...
பாராட்டியது போதும்...
ஏன் என் பாராட்டு
உனக்கு பிடிக்க வில்லையா...
இல்லை, நீங்க பாராட்டர
அளவுக்கு நான் இருக்கேனா...
உனக்கு என்ன குறைச்சல்
என் அழகு பெட்டகமே
இன்றும் உன் அழகிய கண்கள்
எனக்கு போதை உட்டுதடி
சில வெள்ளி கம்பிகள் தவிர்த்து
உன் கார்மேக கூந்தல்
இக்கால பெண்களுக்கு சவால் விடுமடி.
வாழ்க்கையில் வண்ணம் பூசாத உன் அதிரம் எனக்கு என்றும் அதிரசமடி.
நீ நான்கு குழந்தை பெற்றாலும்
உன் இடை
இன்னமும்
இளைத்துதானே இருக்கிறது.

என் வாழ்க்கை நாயகியே
என்னை உன் அழகில் சொக்க வைத்த
என் ஆசை தலைவியே
என்றும் நான் என் இதயத்தில் வைத்து
தாலாட்டும்
என் அன்பு
மனைவியே!
வயது வெறும் எண்ணிக்கை தான்.
மனம் தான் வாழ்க்கையை
நிர்ணயிக்கும்.
உன் சின்ன வெட்கம்
என்னை உற்சாகபடுத்துகிறது
தலைவன் நான் அழைக்கிறேன் வா
அருகில் விரைவில் வா
தலைவியே
தலையில் பூச்சூடி
தங்கரதம் போல் வா
தயங்காமல் வா
வெட்கத்துக்கு விடை கொடுத்துவிட்டு வா
காமன் அழைக்கிறேன்
ரதியே வா
இன்ப பயனம் இனிதே ஆரம்பிப்போம் வா.
- பாலு.

எழுதியவர் : பாலு (6-Dec-19, 6:31 pm)
சேர்த்தது : balu
பார்வை : 197

மேலே