ஆகாயம்

நீலவானம் வெகு அழகு
அதில் தவழும் அம்புலியோ
ஐயோ அழகோ அழகு
கொள்ளை அழகு
தூரத்தில் கண்சிமிட்டும் தாரகைகள்
அழகு, அழகு .......
ஆனால் வானமே உன்னைக் கண்ட நான்
தொட்டு அந்த அம்புலிபோல்
உன்மீது தவழ முடியலையே
ஏன்..... ஏன் .....
நான் கிட்ட கிட்ட வர நீயோ
என்னைவிட்டு எங்கோ
தூர தூர போகிறாய்
இப்போது எனக்கு தோன்றுகிறது
அந்த, அம்புலியும், சூரியரும்
இன்னும் எண்ணிலடங்கா தாரகையும்
உன்னில் அடங்கி ஆடுகின்றன
அந்தரத்தில், வெற்றிடத்தில்
அப்போது அந்த வெற்றிடம்....
அதுதான் நீயோ.....?
நீல வானே..? ஆகாயம்....
எல்லையில்லா, எங்கும் விஸ்தரிக்கும் நீ
நீ யார்.... வானே சொல்லு...
நீதான் எங்கும் வியாபித்திருக்கும்
விஸ்வன்..... விஷ்ணு....
உன் பெயர்தான் இயற்கையா? கடவுளா ?
பகவான்...... அல்லாஹ்... ஏசு...
அப்படிதான்.... என் manasu சொல்லுது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Dec-19, 8:24 pm)
Tanglish : aakaayam
பார்வை : 131

மேலே