என்னோடு தினம் - 4

நினைவுகள் ஒரு சட்டத்தில்
நினைக்க பல கட்டத்தில்
ஆணி அடித்தார் போல்
எல்லோர் நெஞ்சினில் ...
*
பூக்களும் குங்குமமும்
இழந்ததை நினைவு
கொள்ள
இறையாய் மனதில் கொள்ள
**
மனிதர் மட்டும் அன்றி
கடவுளும் சட்டத்திலிட்டு
எங்கள் வீட்டில்
ஆணியடித்த
புகைப்பட சட்டம் ...
****

கைக்குள் அடக்கம்
உன்னுள் பல செயல்கள்
அடக்கம்
*
கறை சில களைவாய்
சில நேரங்களில்
பூச்சும் செய்வாய்
**
குட்டையாக இருந்தாலும்
நாளும் என் முகம்
துடைக்கும் கைக்குட்டையே...
***

நீ சில நேரங்களில்
என் மான த்தைக்
காக்கும் காவலன்
*
ஒட்டிய வயிறோ
புடைத்த வயிறோ
நீயின்றி அமையாது
உடை அலங்காரம்
**
வண்ணங்கள் சிலவற்றில்
காலங்களின் சில மாற்றத்துடன்
என்றும் நான் அணியும்
பெல்டே ...

- செல்வா

எழுதியவர் : செல்வா (8-Dec-19, 7:53 am)
சேர்த்தது : செல்வா
பார்வை : 265

மேலே