காணத் துடிக்குதடி மனது

காணும் விழிகளால்

பாணம் தொடுத்து
மாயங்கள் பல செய்கிறாய்
தேனும் பழமும்
திரட்டி எடுத்து
மலரில் துவைத்து
பூசிக் கொண்டாயோ இதழில்
அது பழரசம்
நடை அன்னம்
குரல் குயில்
உடல் மயில்
இடை கொடி
மலர்ப் பாதம்
பெண்ணே நீ அழகின்
சுவைப் பதம்
காணக் காண
துடிக்குதடி மனது
காதல் கொள்ளத்
துடிக்குதடி வயது


அஷ்றப் அலி


எழுதியவர் : ala ali (8-Dec-19, 11:15 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 199

மேலே