இதயமே என்னை மன்னித்துவிடு

அன்பெனும் மலரை
விளையாட்டாய் பறித்தேன்!
உன்னிதயத்தின் வலி புரியாமல்
பறித்ததை தொலைத்தேன்!!

உன் கண்ணின் மணிகள்-இன்றும்
என் கண்ணுக்குள்-எனதன்பை
ஏன் தொலைத்தாயென்று
கலங்கச் செய்கின்றனவே!

என்னிதயத்தை அள்ளிச் சென்றாய்!
எங்கோ சென்று மறைந்தாய்!!
பிரிவின் வலி புரியும் இக்கணம்!
அருகிலிருந்தால் கண்ணீரால் அபிசேகிப்பேன்!

உன் நினைவுகள்
என்னிதயத்தில்!
உதிரத்தின் ஓட்டமாக
உயிராய் என்றும்!!

என்னுடலில்
உயிர் நீங்கும் நிலையில்..
உன்னினைவை
என்னுடனே எடுத்துச் செல்வேன்!

இனி வரும் பிறவியில்
இதயத்தில் சுமப்பேன்..
அன்பே மன்னிப்பாயா?
அல்லாது தண்டிப்பாயா?

அன்புடன் உன் இராம்..

எழுதியவர் : இராம்குமார் ப (8-Dec-19, 11:33 am)
சேர்த்தது : இராம்குமார்
பார்வை : 277

மேலே