உனக்காகவே

உனக்காகத்தான்
எழுதுகிறேன்
தெரியுமா..?
காலங்கள் கடந்தாலும்
உன் குரலோசை
என் காதுகளில்
பிரதிபலிக்கின்றன..!
நீ பேசிய
வார்த்தைளை
நான் மறக்கவேயில்லை..!
நீ எழுதிய
மடல்களை
நான் தொட்டுப் பார்ப்பதுண்டு..!
உன் அன்பையும்
அக்கறையையும்
இழந்துவிட்டேனென
அழுவதுண்டு...!
என்னுள்ளிருந்த
காதல் பட்டுப்போவதை
மெல்ல மெல்ல
உணர்ந்ததுண்டு..!
எனக்கான
உலகத்தில்
நீ கனவாகிப் போனாய்..!
உனக்காகத்தான்
எழுதுகிறேன்
தெரியுமா..?
இத்தனை
ஆண்டுகளை
நீயில்லாமல்
கடந்தபோதெல்லாம்
தாயில்லாத குழந்தை
அடையும் வேதனையைப்போல
ஆயிரம் மடங்கு
வெந்ததுண்டு...!
உன்னிடத்தில்
வேறொருவரை
அமர்த்திக்கொள்ள
இது என்ன
வேலைவாய்ப்பா..?
வாழ்க்கை வாய்ப்பல்லவா..?
எனக்கு இதுதான் கடைசி
ஜன்மமென்று சில
ஜோதிடர்கள் கணித்தார்கள்..!
உன்னைப் பிரிந்தும்
வாழ்ந்துகொண்டிருப்பதே
இன்னொரு ஜன்மமென்பதை
அவர்களுக்கு உணர்த்தாமல்
சிரித்துக்கொண்டேன்..!
ஒரேயொரு வரம்
கேட்பேன்...!
அடுத்த ஜன்மத்திலாவது
என் கை சேர்ந்துவிடு..!
அங்கேயும் நான்
ஏக்கத்தோடு வாழ்ந்து
மறுபிறவியெடுக்க விரும்பவில்லை..!

எழுதியவர் : தீபி (9-Dec-19, 1:33 am)
சேர்த்தது : தீபி
Tanglish : unakaakave
பார்வை : 489

மேலே