பேதையடி நீ

பெரும்போதையடி நீ
பேரிழப்பிலெனை
மீட்டெடுத்த ஒரு
தேவதை நீ
சிறு பேதையும் நீ
நிழல்போல எனை
தொடர்ந்தோடிவரும்
மழைமேகமும் நீ
கனா தந்தவள் நீ
மனம் எங்கும் நறுமலர்
சூடிவந்த
அழகானவள் நீ
இணை ஆனவள் நீ
என் வானம் வெளிஎல்லாம்
பாசம் நிறைத்துநின்ற
நிலவானவள் நீ

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (9-Dec-19, 3:10 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 212

மேலே