என் இதயக்கூட்டில் ஒளியாக வந்தவள் நீ 555

***என் இதயக்கூட்டில் ஒளியாக வந்தவள் நீ 555****


என்னுயிரே...

இருட்டறையான
என்
இதய கூட்டில்...

நீ வந்தாய் மின்மினி
பூச்சியாக
சிறு ஒளிகொண்டு...

பௌர்ணமி நிலவாக
என் இதயம் முழுவதும்...

நீ ஒளிவீசுவது
எப்போதடி கண்ணே...

என் வாழ்க்கை
துணையாக வந்து...

உன்னோடு நான் சேர்ந்து
வாழ்வேனா தெரியாதடி எனக்கு...

உன்
நினைவுகள் இல்லாமல்...

நிச்சயம் நான்
வாழமாட்டேனடி கண்ணே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (9-Dec-19, 4:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 475

மேலே