வானம் ஏற்றி வைத்த விளக்கு

வானம் ஏற்றி வைத்த விளக்கு

சூரியன் விடைபெற்று
சென்ற பின்பு
இருளுக்குள் தவிக்கும்
உலகிற்கு
வானம் விளக்கு ஏற்றி
வெளிச்சம் தர
சுற்றி வர அனுப்பியுள்ளது

இது எண்ணெய் இல்லா
விளக்குத்தான்
சுடராய் எரிவதுமில்லை
சுற்றி வர புகைப்பது
கூட இல்லை
வட்ட வடிவாய்
செம்மை நிற
சுடராய் பிரகாசித்தாலும்
சூரியனை போல் தகிப்பதில்லை

குளுமையான உணர்வுகளை
அளித்து விட்டு
சூரியன் தலை காட்டும்
முன் அரவமில்லாமல்
மறைந்து போகிறது.

இந்த வானம் ஏற்றி
வைத்த விளக்கு

எழுதியவர் : தாமோதரன் .ஸ்ரீ (9-Dec-19, 5:18 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 203

மேலே