நண்பன்

உலகம் இதுவென
உணர்த்திய என் நண்பன்...
புத்தகபாடம் நடத்திய போது
வாழ்க்கைபாடம் கற்பித்தவன்...
பிழைகள் பல செய்தால்
கனிவாய் கண்டித்தவன்...
கண்ணீர் துளிகளை
தோள்களில் சுமந்தவன்...
இடியென மிரட்டி
மழையென பொழிபவன்...
விடியாத இரவுகளுக்கு
ஒளி தந்தவன்...
காலம் பிரித்தபோதும்
நினைவுகளில் நிலைத்திருப்பவன்...

எழுதியவர் : தமிழ் தாயின் மகள் (10-Dec-19, 11:18 am)
சேர்த்தது : sparkle
Tanglish : nanban
பார்வை : 752

மேலே