கபடம் கயமை பொய்மை

மூன்றெழுத்து நடிகையின்
மூன்றாவது கணவன் பெயர் தெரியுமா?
முதல் கணவரின் பதினாறு வயது மகளை
முயற்சி செய்து கற்பழிக்க துணிந்தவனே அவன்!

அடுத்தடுத்து அதிர்ச்சி அழகிய கதாநாயகியின்
அடுக்களையில் ஒரு கரப்பான் பூச்சி
அவர் அம்மா உட்பட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்
நிமிடத்திற்கு ஆயிரம் வாங்கும் மருத்துவமனையில்

ஏன் கற்பழித்துக் கொலைச் செய்தோம்
குற்றவாளிகளுள் ஒருவனின் பிரத்யோக பேட்டி
கொலைக்காரர்கள் எங்கள் மதம் என்பதால்
காழ்ப்புணர்ச்சியில் துன்புறுத்துகிறார்கள்

தனித்தீவை விலைக்கு வாங்கி நாடாக அறிவிப்பு
மதத் தலைவரின் மகத்தான முயற்சி
இவைகளே இணையத்திலும் ஊடகத்தில்
எல்லோரையும் குதுகலப்படுத்தும் செய்திகள்

தங்கம் விலை, சுங்கவரி உயர்வு பணமதிப்பு ஆட்டம்
உணவில் நஞ்சுக் கலப்படம் கல்வியில் உதாசிணம்
வாகன எரிபொருள் ஏற்றம் அரசு ஊழியர் குறைப்பு
மண், பாறை, மணலால் பெரும் கொள்ளை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அலம்பல்
அவர்களால் பிடிங்கி, வாங்கி குவிக்கும் சொத்துக்கள்
ஆளும் கட்சியினருடன் எதிர்க் கட்சியினரின்
திரைமறைவுக் கூட்டணி அவர்களின் போக்கிரித்தனம்

அரசு அதிகாரிகளின் அறிவீனம் அடாவடித்தனம்
திறமையற்றவர்களிடம் சேர்ந்த பணம் கிடைத்த வேலை
என்பவைப் பற்றி எள்ளளவு செய்தியில்லை என்றும்
எப்படி மாறும் இன்றைய சமுதாயம் நன்றானதாய்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Dec-19, 6:15 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 37

மேலே