உன் மீது கொண்ட காதல் குறையாதடி 555

***உன் மீது கொண்ட காதல் குறையாதடி 555***


என்னவளே...


என்னோடு நீ
இருந்த
போதெல்லாம்...


என் தூக்கத்திலும்
நீயே வந்தாய்...


அன்று சுகமாக
எனக்குள் வந்தவளை...


இன்று சுமையாக
வெளியேற்றுகிறேன் கண்ணீரால்...


என்னோடு நீ
இருந்த
போதெல்லாம்...


காகிதத்தில்
ஆயிரமாயிரம் எழுதினேன்...


இன்றுதான்
உணர்ந்தேனடி நான் ...


கண்ணீரும் ஆயிரம் ஆயிரம்
எழுதும் என்று...


உன் வாழ்வில்
என்றாவது ஒருநாள்...


எனக்காக நீ
கலங்குவாய்...


உன் விழிகள் எனக்கு
காட்டி கொடுக்குமடி...


என் ஆயுள்
குறைந்தாலும்...


உன்மீது நான் கொண்ட
காதல் என்றும் குறையாதடி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Dec-19, 3:33 pm)
பார்வை : 804

மேலே