அம்மா

அம்மா என்ற சொல்லே உலகில்
அன்பின் முதல் அடையாளம்.

ஆனந்தம் பெருகும் அட்சய பாத்திரம்
அள்ள அள்ள குறையாமல்.

இயலாதபோதிலும் இன்முகம் காட்டி
அன்போடு உபசரிப்பவள் தாய்.

உயர உரமூட்டும் தாயை உயர்ந்தபின்
உயர்த்திப் பிடிப்பவர் நன்மக்கள்.

ஊனமான பிள்ளை தனது ஆனாலும்
அக்கறையோடு சுமப்பவள் தாய்.

எதுவும் ஈடாகாது தாயின் அன்புக்கு
அவளன்றி ஏற்றமேது உலகுக்கு.

ஏறு நடை கண்டு பூரிக்கும் அன்னை
திருஷ்டி சுற்றி புன்னகைப்பாள்.

ஐயம் ஏது? தாய் அன்புக்கு நிகரேது?
தாயின் மடியே சொர்க்கம்.

ஒன்று கூடினால் கூட்டுக் குடும்பம்
தாயின் மனம் குளிரும்.

ஓலம் கூடாது தாய்க்கு அதனின்
பெற்றவர் பெறுவர் தவிப்பு.

ஔவைப் பாட்டி வயதான அன்னை
அறிவுரை உணர்ந்தால் நன்மை.

எழுதியவர் : அலாவுதீன் (11-Dec-19, 8:19 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : amma
பார்வை : 117

மேலே