தக்கார்க்கே ஈவர் விழுமியோர் – நன்னெறி 36

நேரிசை வெண்பா

தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்என்று
மிக்கார்க் குதவார் விழுமியோ - ரெக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பாரோ போய். 36 - நன்னெறி

பொருளுரை:

எப்போதும் நெற்பயிருக்கே நீரை இறைப்பர். காட்டிலே உலர்ந்து கிடக்கும் புல்லுக்கு இறைப்பாரோ?

அது போல உயர்ந்தோர் தகுதியுள்ளோருக்கே உதவுவர். தகுதியிலாதவர்க்குக் கொடுக்க மாட்டார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-19, 11:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே