காதல்

நதிக்கரையில் மாலைப்பொழுதினில்
நங்கை எந்தன் நெஞ்சத்தில் புகுந்தவள்
நல்வரவிற்காக நான் காத்திருந்தேன்
கண்கண்ட தூரம் வரை அவளைக் காணவில்லை
நதிக்கரை பக்கத்து மலர்ச்சோலை .......
அதனுள்ளே இப்போது நான் .....
என்னை வரவேற்ற செண்பகம் பூத்துக்குலுங்கும்
மரத்தைக் கேட்டேன்.... செண்பகமே என்
செண்பகத்தைப் பார்த்தாயா என்று .... இல்லை
என்றது செண்பகம்.... முல்லைக்கொடியைக் கேட்டேன்
இல்லையே என்றது...... சிரிப்பதுபோல் மலர்ந்த
மல்லியைக் கேட்டேன்.... ஹுஹும் இல்லையே
என்றது ........ மெல்ல கீழ்வானில் மதி முகம் காட்ட
சோலையை விட்டு விட்டு மீண்டும்
நதிக்கரை அடைந்தேன்..... அங்கு
எனக்காக காத்திருந்தாள் என் செண்பகம் எனக்காக
மதிமுகம் காட்டி என்னுள்ளத்தில்
தன்னொளி வீச

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Dec-19, 1:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே