பெரியார்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை – நன்னெறி 37

நேரிசை வெண்பா

பெரியார்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை
தரியா(து) உயர்வகன்று தாழும் - தெரியாய்சொல்
பொன்உயர்வு தீர்த்த புணர்முலையாய்! விந்தமலை
தன்உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. 37 - நன்னெறி

பொருளுரை:

லக்ஷ்மிதேவியை அழகில் வென்றவளே! அகஸ்திய முனிவர் முன் உயர்வு பேசிய விந்திய மலை அன்று தாழ்ந்து போயிற்று.

அது போல பெரியோர் முன் தன்னைப் புகழ்ந்து பேசிக்கொள்ளும் மூடனும் உயர்வு நீங்கித் தாழ்வான்.

புணர் முலை - இணைந்துள்ள மார்புகள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-19, 9:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே