உள்ளத்தில் ஹைக்கூ நூல்ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் செல்வி இர ஜெயப்பிரியங்கா

உள்ளத்தில் ஹைக்கூ...

நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி.

நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.

நூல் வெளியீடு : இர . ஜெயச்சித்ரா !
வடக்குமாசி வீதி, மதுரை-1.
பக்கம் : 36. விலை : ரூ.20 முதற்பதிப்பு : 2004
******

கவிஞர் இரா. இரவி அய்யா அவர்;கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம்’ என்னும் கட்டுரையே முதன் முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது.

கவிதைகளுக்கான இலக்கிய சிற்றிதழ்கள், மின்னிதழ், கவியரங்கம் முதலிய கவிதைகளங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவா; அய்யா அவர்கள். அவரின் நான்காவது நூல் ;;உள்ளத்தில் ஹைகூ’. நூலின் அட்டைப்படத்தில் வரலாற்று சிறப்புமிக்க மதுரை திருமலை நாயக்கர்; அரண்மனை அமைந்துள்ளது. அய்யா அவாகள் தற்போது மதுரை விமான நிலையத்தில் உதவி சுற்றுலா அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் ஆற்றி வருகின்றார்.
.அய்யா அவர்களின் கவிதைச் சாரலில் தொடங்கிய கவிபயணம் இருபத்திஓராவது நூலான ‘இலக்கிய இணையர்; படைப்புலகம்’ ஆக மலா;ந்துள்ளது. சிற்றிதழ் தொடங்கி உலக இணையங்கள் பலவற்றிலும் தம் படைப்புகளை படைத்து வருகின்றார். தமிழில் முதல் ஹைகூ இணையமான கவிமலர்; என்னும் இணையதளத்தை தொடங்கி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றுள்ளார்.

ஹைகூ திலகம், கவியருவி, கவிச்சூரிpயன் போன்ற விருதுகளும், உலகத்தமிழ் பல்கலைகழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது நேர்முகம் ஜெயா, கலைஞர், பொதிகை, சன் முதலிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளது. இனி நூலுக்குள் நுழைவோம்!

இன்றைய கல்வி நிறுவனங்கள் தரமற்று இருப்பதாக நூல்

‘பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்!’

‘கல்வி இன்று
கடைச்சரக்கு ஆனது
மெட்ரிக் பள்ளி;’!

முரண்பாட்டு பெயர்; மனிதருக்கு வைத்துள்ளனர்; என்று நூல்.

‘முரண்பாடு
யானைக் கறுப்பு
பெயரோ வௌ;ளைச்சாமி’!

மூட நம்பிக்கையை சாடுவதாக நூல்.

‘கடவுளை நம்பினோர்
கைவிடப்படார்
சபாமலை யாத்திரை விபத்து’!

‘தொடாமல் தந்தார்; பிரசாதம்
தொட்டு எடுத்தா; காணிக்கை
அர்;ச்சகர்!’’

‘அயல்நாடு கடத்தல்
கடவுள் சிலைகள்
அவனின்றி ஓரணுவும் அசையாது!”

தமிழ்கொலை பற்றி நூல்

‘அழைத்தது குழந்தை
பதப்படுத்தப்பட்ட பிணமென
மம்மி’!

மழலைப் பருவம் மகிழ்ச்சி நிறைந்த பருவம் அப்பருவம் குறித்து நூல்;

‘என்ன அதிசயம்
மரங்கள் நகர்கின்றன்
வியப்பில் மழலை’!

‘கோடை மழை
குதூகலப் பயணம்
திரும்புமா? குழந்தைப் பருவம்’!

குழந்தை தொழிலாளர்;களின் அவலநிலை பற்றி நூல்.

‘ஓழிந்ததாகச் சொன்னார்கள்
ஓழியவில்லை இன்னும்
குழந்தை தொழிலாளர் முறை !

அரிய பூச்சி இனங்களில் அழகிய வண்ணத்துப் பூச்சி மற்றும் மின்மினிபுச்சி குறித்து நூல்.

‘பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி’!

‘மின்னுவதெல்லாம்
பொன்னல்ல
மின்மினிப்புச்சி’!-

உள்ளத்தில் ஹைக்கூ... எதார்த்த நடப்பியல் எடுத்து இயம்பும் கவிஞரின் பன்முகபார்வை கொண்ட இனிய நூல் உள்ளத்தில் ஹைக்கூ...

.

எழுதியவர் : கவிஞர். இரா. இரவி (15-Dec-19, 4:39 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே