அவன்

முயற்சிக்கு எடுத்துக்காட்டு
சிலந்தி
முயற்சியில்
அவன்
சிலந்திக்கு எடுத்துக்காட்டு

அவனுக்கு
அரை வழியும் தெரியும்
அற வழியும் தெரியும்
அறை வழியும் தெரியும்

இறைவன் அவனை
நெருப்பு படுக்கை மீது
தினந்தோறும் நடக்க வைத்தான்

ஆனால் இறைவன் அறியவில்லை
அந்த நெருப்பின் வெப்பத்தை விட
அவன் பாதங்களின்
வெப்பம் அதிகம் என்று

அவனிடம் வறுமை இருந்தது
அதைவிட அதிகமாய்
நேர்மை இருந்தது
இதுவே அவனுக்கு
பெருமையாய் இருந்தது

எல்லோரும் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்க
இவன் மட்டும் மனித மனத்தை
தேடி ஓடிக் கொண்டிருந்தான்

வஞ்சகம் வரைந்த இவ்வுலகில்
இவன் நெஞ்சகம் நிறைந்து
போராடினான்

எழுதியவர் : (16-Dec-19, 4:19 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : avan
பார்வை : 31

மேலே