நேர்வழி செல்ல

கிறங்க வைக்கும் பார்வை
மயங்க வைக்கும் அளவுக்கு
அவளுக்கு அழகை கொடுத்ததும்
அவன் ஒருவன். அதுவே இறைவன்
அது நல்லதென நினைத்து நாகரீகத்தையும் .
தன்வசம் கொண்டவளும் பெண்தானே
பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியங்கள்
சேர்த்து வைத்து பெற்றிட போற்றிடும்
பாராட்டும் வாழ்த்தும் பல கோடி..
உணராத உயிர்கள் பலவுண்டு உலகில்,
பெண் அவள் உலகின் கண்களே
பாதை தெரியாப் பாலகன் போல்
பறக்க நினைத்தும் பறக்க முடியாத
எண்ணங்களை சிறகுகளாக
படபடவென அடித்து வலம்வரும்
பெண்களே நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
துவண்டு விடாதீர்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நேர்வழி செல்ல ....

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Dec-19, 11:58 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nervali sella
பார்வை : 107

மேலே