குறைமதி வேண்டாம்

குறைமதி வேண்டாம் .

சடங்கு மொழியாம்
சமஸ்கிருதத்தை
சாகா மொழியெனும்
சதிகாரர்களே
குறைமதியின் கூடாரங்களே
என் தாய்மொழியின்
சிறப்பும் பிறப்புமறியா
பதறுகளே
பல்லாயிரண்டுக்கு முன்
மூத்த மொழியடா என்
பழந்தமிழான செந்தமிழ்
மக்கள் மொழி - என்றும்
மக்கா மொழி - அந்த
சொக்கனின் குற்றத்தையும்
சுட்டிக்காட்டிய சுந்தரமொழி
அறிவியல் ஆதாரங்கள் பலவுண்டு
சமஸ்கிருதத்தில்
சக எழுத்தாளராய் ஒரு சகி உண்டோ
தமிழின் வரலாற்றை பார்
கற்காலத்திலே பொன்வார்த்தைகளை
புடம்போட்டவர்கள் தமிழ் பெண்மணிகள்
ஹிந்தியும் இங்கே ஈடாகாது
கீழடியை படி - தமிழின்
கீர்த்தி தெரியும்
இலக்கணம் தெரிய
இன்பத்தமிழ் படி
ஒண்டவந்த ஓநாய்களெல்லாம்
ஓலமிடுவதா- ஓங்கியுர்ந்த
எங்கள் தமிழை ஒழிக்க நினைப்பதா
மூன்றாம் உலகப்போர்
மொழிபுரட்சிக்குத்தானோ
சந்திப்போம் சாவையும் - எங்கள்
தாய்மொழியாம் தமிழுக்காய்.
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (17-Dec-19, 3:23 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 76

மேலே