பாவம் பெண்

பச்சோந்தி ..... தன்னைத்தான் பகைவரிடம்
இருந்து காத்துக்கொள்ள நிறம் மாற்றிக்கொள்கிறது
ரோசாப்பூ ......... பாதுகாப்பிற்கு முட்களுண்டு
அழகை அணிகலமாய் தந்து
மண்ணில் பெண்ணை உலாவவிடாய் இறைவா
அவளுக்கு மட்டும் நீ ஒரு பாதுகாப்பும்
தராது படைத்துவிட்டாய்
ஒளிக்கு விட்டில் போல
கயவரிடம் மாட்டி மாண்டிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Dec-19, 3:39 pm)
Tanglish : paavam pen
பார்வை : 80

மேலே