அவன் நிலை

அவன் நிலை

என்றோ அவன் எறிந்த கற்கள்
இன்று அவனை நோக்கி;
ஒவ்வொன்றாய் பக்குவமாய் சேர்த்து
பலம் வாய்ந்த அத்திவாரம் இடுகின்றான்
பக்குவ நிலையில் ;
அவன் ஜீவன் இப்புவியில்
கர்மவினைகள் அறுத்து
தூயவடிவில்;
இயற்கையுடன் நட்பு பேசி
எதிலும் அவன் தன் விம்பம் பார்த்து
பரவச நிலையில்;
இவன் பயித்தியமென தூற்றும் சுடுசொற்கள்
இவன் செவிகளில் தேனாய்
கிருஷ்ண நாமமாய் ஒலிக்க
சக மனிதர் இதய கமலத்திலும்
அவன் பேரன்பை வித்திட
பட்டாம் பூச்சியாகின்றது
அவன் மனது.

~ நியதி ~

எழுதியவர் : நியதி (19-Dec-19, 9:50 pm)
Tanglish : avan nilai
பார்வை : 245

மேலே