காதலின் சந்திப்பில்

கண்கள் மட்டும் கடலா என்ன
மிதக்கும் மீனாய் மிதக்குது உன் விழிகள்
மிதக்கும் விழிகளில் மூழ்கிவிட்டேன்
நம் முதல் சந்திப்பில்
சர்க்கரை புதைத்த உந்தன் இதழ்களிடம்
மொழியின்றி தவித்தேன்
நம் இரண்டாம் சந்திப்பில்
நீர்திரையில் நிற்க்காமல் செல்லும்
மின்னலைப்போல் நில்லாமல்
செல்லுது வார்த்தை
நம் மூன்றாம் சந்திப்பில்
ஒலி தேவையில்லை
ஒளி போதுமென அறிந்தேன்
நம் நான்காம் சந்திப்பில்
கண்ணாடி பிம்பமாய் என்
எதிரே நீ நின்றாய் எனக்கும்
உயிர் கொடுத்தாய் உன் உயிருக்குள்
நம் ஐந்தாம் சந்திப்பில்
கைகள் இரண்டும் கர்பின் காவலா
என் விழி தாண்டி கோடு கிழித்தாய்
நம் ஆறாம் சந்திப்பில்
உயிரே தாயானாய்
என் உதிரம் சுமந்து
உதித்த உயிரை கையில் தந்தாய்
நம் ஏழாம் சந்திப்பில்

எழுதியவர் : கவிமாணவன் (20-Dec-19, 8:21 am)
பார்வை : 197

மேலே