பணத்தை மதிக்க மாட்டோம்

வெளிநாட்டு நகைச் சுவை.

நாங்கள் பணத்தை மதிக்க மாட்டோம்; மக்களைத்தாம் மதிப்போம் !!

ரஷ்யாவின் கலஷ் நிக்கோவிற்கும் அமேரிக்காவின் பீட்டர் வில்லியம்ஸிற்கும் வாக்குவாதம் வந்து விட்டது. தத்தம் நாடும் அதன் பழக்க வழக்கங்களும்தான் சிறந்தவை என்று வாதிட்டுக் கொண்டார்கள்.

கலஷ் நிக்கோவ் சொன்னான் - "பீட்டர், எங்கள் நாட்டில் நாங்கள் எப்போதுமே பணத்தைப் பெரிதாக மதிப்பதில்லை, மக்களைத்தான் பெரிய சொத்தாக மதிக்கிறோம் தெரியுமா? நீங்கள்தான் பணவெறி பிடித்தவர்கள் ஆயிற்றே!"

பீட்டர் சொன்னான் - "ஆமாம்! கல்ஷி ! நீ சொல்வது உண்மையாகத்தான் இருக்கிறது!! நாங்கள் பணத்தைப் பணப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைக்கிறோம்; நீங்கள் மக்களைச் சிறையில் வைத்துப் பூட்டி வைத்துக் கொள்கிறீர்கள்!"

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (21-Dec-19, 7:15 pm)
பார்வை : 181

சிறந்த நகைச்சுவைகள்

மேலே