தசாவதார தத்துவம்

திருமாலின் திரு அவதாரங்கள் பத்தில் ஒன்று இராமாவதாரம் .

திருமால் எடுத்த அவதாரங்களுக்குள் படிமுறையில் வளர்ச்சித் தொடர்பு உண்டு .

உயிர்கள் முதன்முதலில் நீரில் தோன்றின என்பர் உயிர்நூல் வல்லார் .

நீரிடை தோன்றி வாழ்வது மீன் -- மச்ச அவதாரம் .

நீரிலும் நிலத்திலும் இருக்கக்கூடியது ஆமை -- கூர்மாவதாரம்

நிலத்திலேயே வாழக்கூடியது விலங்கு : ஆற்றல் பெற்றது .ஆனால் அறிவு பெறாதது பன்றி : வராக அவதாரம் .

அடுத்த அவதாரத்தில் ஆற்றலோடு அறிவு இணைந்தது .ஆயினும் முழு மானிட உருவம் அமையவில்லை .நரசிம்ம அவதாரம் .

தொடர்ந்து உடம்பும் வளர்ந்தது : ஆனால் ,உள்ளம் வளர வில்லை .அதாவது யான் எனது எனும் செருக்கும் சினமும் நீங்கவில்லை -- பரசுராம அவதாரம் .

உள்ளம் உயர்ந்து தர்மத்தின் காவலனாக ஆன அவதாரம் இராமாவதாரம் . தர்மம் இருந்தது ,ஆனால் ஞானம் இல்லை .மான் பின் சென்றமையும் சீதை எவ்விடத்தில் இருக்கிறாள் என்றறியாது தேடியமையும் இன்னும் பிறவும் .

அடுத்த அவதாரம் பலராம அவதாரம் -- ஞானம் வாய்த்தது .ஆனால் போதிக்கவில்லை .அன்னார் .

அடுத்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம் .ஞான நூலாகிய கீதை போதித்தது .ஆயினும் தான் தர்மங்களுக்கு உட்பட்டு பல இடங்களில் நடக்க முடியாமல் போயிற்று . (கர்ணனிடம் வரம் கேட்டு வலுவிழக்கச் செய்தமையும் , தருமரைப் பொய் கூறாத தூண்டியமையும் மற்றும் பிறவும் )

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்கும் குணம் வாயாமை நோக்கி இனி வரவேண்டிய கற்கி அவதாரத்தில் அவையும் அமைந்து முழுவளர்ச்சி எய்தும் என்பது பெரியோர் கண்ட முடிபு ஆகும் .

கம்பன் காவியம் நூலில் இருந்து -- வாரியார் ஸ்வாமிகளின் வரிகள் .

நன்றி

எழுதியவர் : வசிகரன்.க (21-Dec-19, 8:40 pm)
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே