இயற்கை

மனதிற்கு உவகைதந்திடும் மலர்கள்
கண்ணிற்கு விருந்து
மணம் தந்திடும் மலர்கள்
மணம் நம் உள்ளத்தில் நிரப்பி
உள்ளத்தை கிறங்கிட செய்கின்றன
மலர்கள் மலர்ந்தால் தேன் உண்ணும்
வண்டுக்கு கொண்டாடட்டம்
தேன் உண்டு களித்து மலர் மடியில்
காதலில் மயங்கி உறங்கிடும் வண்டு
மலருக்கும் இந்த களியாட்டத்தில் கொண்டாட்டம்
மலரின் மகரந்தம் பரவும் ..... இனப்பெருக்கம்
விதையும் உருவாக .....
மலருக்கு தெரியாது இதையெல்லாம் கண்டு
நாம் கழிக்கின்றோம் என்று ......
இது இயற்கையின் நியதி

வசந்தம் வந்தது .....
பருவத்தின் மகுட ராணியாய்....
கூடவே வந்தது மண் வாசனை ஏந்தி
வசந்த கால மழைத்துளிகள் ......
இதைக் கண்டு கானக்குயில் இசைக்கும்
அது குயில் தன் ஜோடிக்கு விடும் காதல் குரல்
வா அன்பே, வா ..... இணைந்திடுவோம் இவ்வினிய
வேளையில் என்பதுபோல் ........
குயிலின் கூவல் அமுத கீதமாய் பாய்கிறது
நம் காதினில்....... பாரதிக்கும்
குயில் பாட்டு என்று பாடுகிறார் பாரதி
குயில் அதன் ஜோடியை அழைக்கும் கூவல்
நமக்கு நம் மனதிற்கு இதம் .......
வசந்தம் வந்தது.....
வானம் இருந்தது..... கார்மேகம் சூழ்ந்திட
கானத்தில் மயிலுக்கு ஒரே கொண்டாட்டம்
ஆண் மயில் அழகிய தொகை விரித்து
நடனம் ஆடுது...... தன் பேடைக்கு அது
இப்படி ஆடி இன்பம் சேர்க்க
பெடையும் வந்து சேர்ந்து ..... இரண்டும்
கலந்து இன்பலோகத்தில் .....
ஆண் மயிலின் ஆட்டம் நம் கண்களுக்கு விருந்து..
....
மயில் நமக்காக ஆடியதா.... இல்லை
இப்படித்தான் இயற்கையில் எல்லாம்
இன்ப மயம்....... மைனாக்கள் கொஞ்சும் கீதம்
கிளியிகளின் கிள்ளை மொழி காதல்...
கொஞ்சும் மாடப்புறாக்கள் ........

எல்லாம் இயற்கையில் அழகு....
அழகு பொருள் அத்தனையும் கண்டு இன்புறுவோம் நாம்
கண்களுக்கு விருந்து அவை

இயற்கை நமக்களித்த விருந்து ......? !!!!

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Dec-19, 2:31 pm)
Tanglish : iyarkai
பார்வை : 250

மேலே