இயற்கை வளம் 6

களிப்புடன் காணும் கனவுக ளாலே
துளிர்த்திட வேண்டும் தளிர்.51
*
தளிர்நுனி தூங்கும் தனித்தேன் முகையில்
குளிர்பூ மலர்போல் மலர்.52
*
மலர்ந்திடும் வாழ்வின் மகிழ்வினை காலை
புலர்வென கொள்வாய் புரிந்து 53
*
புரிந்துணர் வாலே புகழ்பெறும் வாழ்வை
சரிந்திடா வண்ணம் சமை.54
*
சமைத்திடும் வாழ்வில் சமத்துவம் ஓங்க
அமைத்திடு பூங்கா வனம்.55
*
வனமெனும் போது வாழ்ந்திடு மூற்று
தினமதி லூறல் திறம்.56
*
திறமுடன் பாயும் திரவிய ஊற்று
நிறைவென வேண்டும் நிலத்து.57
*
நிலத்துடன் நீரும் நிறைவுள வேரும்
வளமுற செய்வாய் வகை.58
*
வகைசெயும் போது வளர்ந்திடும் நாடு
தகைபெறக் கூடும் தனித்து.59
*
தனித்துவ மாகும் தரமுள நாட்டிற்
கினிப்புச் சுவையாகும் வேம்பு.60
*
தொடரும்.....
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Dec-19, 2:48 am)
பார்வை : 171

மேலே