நல்லதை நினைப்போம் நல்லதைச் செய்வோம்

வீதியிலே சென்ற மகள் வரும் வரைக்கும்

விறைப்புடனே வழிநோக்கும் தாயின் உள்ளம்
பாதகர்கள் பாதகங்கள் எல்லை இல்லை
பரிதாபம் வன்கொடுமை வன் புணர்வு


ஏதுசொல்ல இழிவுநிலை என்று மாறும்

ஏன் மனிதா கேடுனக்கு வாழும் காலம்
தீது வேண்டாம் விட்டுத் தள்ளு
திருந்தி வாழு இறையருள் உன்னைத் சேரும்


சோதிஇறை தந்த செல்வம் உன்னிடத்தில்
சுகபோக வாழ்வுனக்கு என்ன குறை
சூதுவாது எப்போதும் வேண்டாம் மனிதா
சூழ்நிலைகள் யாதாக இருந்தால் என்ன

வேதனையே நாள்முழுதும் தீராக் கஷ்டம்
விரும்பியது ஏதும் இல்லை சோறும் இல்லை
நாதியற்று வாழுகின்றான் ஏழை இங்கே
நாள்செழிக்க மனமிரங்கி ஏதும் செய்க

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (25-Dec-19, 12:07 pm)
பார்வை : 400

மேலே