வேட்பாளரே வேட்பாளரே

வேட்பாளரே வேட்பாளரே
சிரம் உயர்ந்த வேட்பாளரே
வெற்றி நிலைக்கட்டும்
தோல்வி இறக்கட்டும்
தீர்மானங்களை நிறைவேற்றிடுங்கள்
தீராத பிரச்சனைகளை போராடி வென்றிடுங்கள்

வறட்சி பூமியில்
புரட்சியை உருவாக்குங்கள்
எழுதாத வரலாறு - இனி
உங்களால் எழுதபடட்டும்
தேநீர் கடை வீதிகளிலும்
உங்கள் பெயர் இனிக்கட்டும்

மை காய்ந்ததுபோல்
தீர்மானங்கள் காயாமல் இருக்கட்டும்
வாக்குகளை பெரும் ராசாவே
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
இனி விரல் தீர்மானிக்கும்
வெற்றிக்குரல் பெயரொலிக்கும்

வாழ்த்துக்கள் வேட்பாளரே...

BY ABCK

எழுதியவர் : (27-Dec-19, 7:10 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 61

மேலே