குருஜி வாசுதேவ் எழுதிய சூபி கதைகள் புத்தகத்தில் வாசித்த ஒரு சில துளிகள

குருஜி வாசுதேவ் எழுதிய சூ..;பி கதைகள் புத்தகத்தில் வாசித்த ஒரு சில துளிகள.

பவுணர்ணமி இரவு
திருடன் ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான். ஒதுக்குப்புறமாய் ஒரு குடிசையை கண்டான். அப்பகுதிக்கு அவன் புதியவன். அந்த குடிசையை கண்டதும் உள்ளே புகுந்து விட்டான். அவனுடைய இயல்பு அது. அங்கும் இங்கும் ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்தான். உள்ளே ஏதாவது இருந்தால்தானே அகப்பட ?

அந்த சம்யத்தில் திடீரென வெளிச்சம் விழவும் திகைத்து திரும்பினான். கையில் விளக்குடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இருட்டில் என்ன தேடுகிறாய்? இயல்பாய் கேட்டவர் என்னை எழுப்பி இருக்கலாமே? கதவு ஓரத்தில் தான் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுப்பி இருந்தால் உனக்கு வீடு பூராவையும் சுற்றி காண்பித்திருப்பேன்.

எளிமையாக அப்பாவியாக அவர் கேட்ட்தும் அவன் மனது திகைத்தது, திருட வந்தவனிடம் மிரட்டாமல் கேட்பவரிடம் நான் யாரனெ நினைத்தீர்கள், நான் திருடன் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதனால் என்ன ஒவ்வொருவருமே ஏதாவது ஒன்றாக இருக்கத்தானே வேண்டும் என்றார். இந்த வீட்டில் முப்பது வருடங்களாக இருக்கிறேன் நான் எதையும் பார்த்ததில்லை. இருந்தாலும் உன்னுடன் வருகிறேன், இருவரும் சேர்ந்தே தேடுவோம். ஏதாவது கிடைத்தால் பங்காளி ஆகி விடுவோம்.

திருடனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இந்த மனிதருக்கு ஏதாவது பைத்தியமோ? திருடன் என்று சொன்ன பின்னாலும்…. எப்படியாவது போய் விடவேண்டும் என்று எண்ணீனான். வெளியில் வேறு இட்த்தில் கொஞ்சம் திருடிய பொருட்களை வைத்து விட்டு வந்திருந்தான்.

நான் போகிறேன் நழுவ பார்த்தான். நீ வெறுங்கையோடு திரும்பி போக கூடாது, அது என்னை அவமானப்படுத்துவதாக இருக்கும், இந்தா இதை வைத்துக்கொள் என்று தன் மீது போர்த்தியிருந்த கம்பளியை கொடுத்தார். வெளியே கடுமையான பனி பெய்கிறது, கம்பளியை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டார்.

என்ன காரியம் செய்கிறீர்கள், நான் ஒரு திருடன்.

அது ஒரு பெரிய விஷ்யமா? என்றார் சகஜமாக, அதுவும் ஒரு தொழில்தானே.

வெறும் கோவணத்துடன் இருக்கிறீர்களே? போர்த்தியிருந்த கமப்ளியையும் கொடுத்து விட்டீர்கள்.
பரவாயில்லை, இந்த கம்பளி இருந்ததால்தான் நான் இங்கு இருந்திருக்கிறேன். இப்பொழுது அதுவும் என்னிடமிருந்து போய்விட்ட்து, இனி நான் உன் கூட வருகிறேன். உன்னிடம் பொருட்கள் இருக்கலாம், பரவாயில்லை, எனக்கு ஏதாவது கொடுத்து உதவு மாட்டாயா?

திருடனுக்கு தர்மசங்கடமாகி விட்ட்து தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சூ..;பி ஞானி என்பதை அவன் உணரவில்லை. ஐயா எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, உங்களை கோவணத்துடன் திடீரென்று கூப்பிட்டு போனால் யார் எவரென்று கேள்வி எழும்?
.
அதுவும் சரிதான் என்று ஞானி நான் உன்ன்னை சங்கடப்படுத்தவில்லை. நீ போகலாம் என்றார். அவன் திரும்ப எத்தனித்தான் ஏய் இங்கே வா..திடீரென்று அவரின் மிரட்டல் ஒலிக்க திருடன் திகைத்து திரும்பி வந்தான்.

வாழ்க்கையில் கொஞ்சமாவது நற்பண்புகளை கற்றுக்கொள். நான் உனக்கு கம்பளி கொடுத்தேன், இவ்வளவு நேரம் பழகியுள்ளேன், அதற்கு நீ நன்றி சொல்ல வேண்டாமா? அது உனக்கு நன்மை செய்யும். முதலில் நன்றி சொல், அடுத்து கதவை திறந்து வந்தாய், போகும்போது மூட வேண்டாமா? நான் வெற்றுடலுடன் இருக்கிறேனே குளிராதா? நீ திருடன் என்றாலும் பரவாயில்லை, அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் பழக்க வழக்கங்களில் நான் கண்டிப்பானவன், புரிகிறதா?

திருடன் விட்டால் போதும் என்று நன்றி சொல்லி விட்டு அவர் சொன்னபடி கதவை சாத்தி விட்டு ஓடி விட்டான்.

கொஞ்ச காலம் கழித்து அவன் காவலரிடம் பிடிபட்டு விட்டான் நீதிபதி அவனிடம் கேட்டார். உன்னை தெரிந்தவர்கள் யாராவது இந்த ஊரில் உண்டா? நிறைய் பேருக்கு அவனை தெரியும், அவனுக்காக சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள். யார் வந்து சாட்சி சொல்வார்கள் யோசித்தவனுக்கு சட்டென்று சூ..;பி ஞானியின் பெயரை சொன்னான். அதிர்ந்து போனார் நீதிபதி.
இது பொய்யாயிருந்தால் உன்னை கடுமையாக தண்டிப்பேன். உண்மையாக இருந்தால் உடனே விடுவிப்பேன். ஞானிக்கு தகவல் அனுப்ப்பட்டு விட்ட்து. அவர் வந்தவுடன் நீதிபதி உங்களுக்கு இவனை தெரியுமா என்று கேட்டார்.

தெரியுமாவா? இவர் எனது நண்பர் நாங்கள் இருவரும் பங்காளிகள், ஒரு நாள் நள்ளிரவு என் வீட்டுக்கு வந்தார். அன்று குளிர் அதிகமாக் இருந்ததால் என் கம்பளியை அவருக்கு அளித்தேன். அந்த க்ம்பளியைத்தான் இப்பொழுது போட்டுக்கொண்டிருக்கிறார்.

நீதிபதி இவர் உங்கள் நண்பர் என்கிறீர்கள், மற்றவர்கள் திருட்டு குற்றம் சுமத்துகிறார்களே.

இருக்காது இவர் இனிமையானவர். என் கமப்ளியை பெற்றுக்கொண்டு எனக்கு நன்றி கூறினார். எனக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் எனது வீட்டு கதவை சாத்தி விட்டு சென்றார்.
ஐயா நீங்கள் இவரை பற்றி இவ்வளவு உயர்வாய் சொன்னதால் இவரை விடுவிக்கிறேன்

தன்னுடன் வந்த திருடனிடம் நீ எதற்கு என்னிடம் வருகிறாய்? கேட்ட ஞானியிடம் ஐயா என்னால் உங்களை விட்டு போக முடியாது, என்னை நண்பர் என்றீர்கள், பங்காளி என்றீர்கள். என்னை இனிமையானவன் என்றீர்கள். இதுவரை என்னை யாரும் மதித்து பேசியதில்லை.

இனி உங்கள் காலடிதான் எனக்கு, உங்களுக்கு இவ்வளவு ஞானம் எங்கனம் வந்தது,நானும் உங்களை போல ஆக வேண்டும்.கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று உங்களிடம் உள்ளது, அதை என்னால் காண முடியும் என்று நினைக்கிறேன்.

இந்த அற்புதமான சூ..;பி கதை நமக்கு சொல்வது என்ன? புறப் பொருள் அனைத்தையும் உதறி தன்னுள் தான் தேடி அகப்பொருளை கண்ட்டைந்தவர் அவர். அவரிடம் வழங்க எல்லாம் இருந்தது. ஆனால் எவரும் அதை நாடி வரவில்லை. ஒரு திருடன் அவரை தேடி வந்தான் வெறும் பொருள்களை தேடி வந்தவனுக்கு அழியாத செல்வம் கிடைத்தது.இந்த செல்வத்தின் மதிப்பு அவனுக்கே தெரியாது என்பதுதான் வியப்பு.

இப்படித்தான் ஞானம் பெற்ற பலரும் ஆலயங்களிலோ, வழிபாட்டு தளங்களிலோ அன்றாடம் தொழும் பக்திமான்களாக அவர்கள் இருந்ததே இல்லை. ஏன் இப்படி அமைகிறது? என்ன காரணம்?

இது பற்றி முழுமையாக அலசும் போது கிடைப்பது இயற்கை என்றுமே புறச் சூழ்நிலைகளை பார்ப்பதில்லை. அவன் மனதை மட்டுமே பார்க்கிறது. காலி பாத்திரம் எளிதில் நிரம்பும் என்பது ஞான மொழி.

ஆலயப்பணி, இறை தொண்டு என்று ஈடுபடும் பலரிடம் உள்ளூர ஊடுருவி பார்த்தால் மனதில் அகந்தை கொப்பளிப்பதை காணலாம்.
நான் 48 வருடங்களாக மாலை போட்டு விரதம் இருப்பவன் என்பார் ஒருவர். இந்த பகுதியில் சுத்தமாக மந்திரம் ஓதுபவர் என்னை தவிர யாருமில்லை என்பார் ஒருவர். இன்னொருவர் தை பிறந்தால் போதும், போக வர 500 கிலோ மீட்டர் நடந்தே போய் ஸவாமியை தரிசன்ம் செய்து முடி இறக்கி விட்டு கும்பிட்டுவிட்டு வருவேன் என்பார் ஒருவர்.

இவர்களிடம் பக்தி இருப்பது உண்மைதான். கூடவே அதன் அடிப்படையில் பெருமிதம் ஒட்டி கொண்டிருக்கிறது.தாங்கள் புனிதமானவர்கள் என்ற எண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

சூ..;பி ஞானி தனது ஒப்பற்ற ஞானத்தை திருடனுக்கு அளித்தார். இவன் தொழில் திரூடுவதுதான் என்றாலும் இவன் உடல்தான் அதை செய்தது.இவன் உள்ளத்தில் திருட்டை பற்றிய எண்னம் இல்லை என்பதை கண்டார்.

இப்படி உதாரணமாக கொள்ளலாம், இராமாயணத்தை படைத்த வால்மீகி அடிப்படையில் ஒரு வேடர், நாரதரின் கேள்வி இந்த பாவமான தொழிலை எதற்கு செய்கிறாய்? அதற்கு அவர் சொன்னது எனது மனைவி குழந்தைகளையும், பெற்றோரையும் காப்பாற்ற செய்கிறேன் என்கிறார். அப்ப்டியானால் அவர்களிடம் கேள் உனது பாவத்தில் பங்கு கொள்வார்களா என்று.
அவர்கள் ஒருவரும் இவரது பாவத்தில் பங்கு பெற வரவில்லை, ஆனால் எங்களை காப்பது மட்டும் உன் கடமை என்று வலியுறுத்தினார்கள். உண்மை புரிந்த்து வால்மீகிக்கு.

பெளத்த மத்த்திலும் எண்ணற்ற கொலைகளை செய்த அங்குவிமான் என்ற கொடியவன் புத்தரால் ஆட் கொள்ளப்பட்டு மனம் மாறினான்.

இவை அனைத்தும் சுட்டி காட்டுவது ஒன்று மட்டுமே பிறப்போ,கல்வியோ, சுற்றுப்புற சூழ்நிலைகளோ ஒருவன் ஞானம் பெற காரணமாக அமைவது இல்லை. அதே போல அவன் ஞானம் பெற அவைகள் தடைகளாகவும் இருப்பது இல்லை.

காலியாக இருக்கும் ஒரு பாத்திரத்தில் மிக எளிதாக நீரை நிரப்பி விட முடியும். ஏற்கனவே ஏதாவதொன்றால் நிரப்ப பட்டிருக்கும் பாத்திரத்தில் நீரை நிரப்ப முடியாது. முதலில் அந்த பாத்திரத்தை முழுவதும் சுத்தம் செய்யப்படவேண்டும்.

நாம் எல்லோருமே கற்பிதங்களால் நிரப்ப்பட்டுள்ளோம். பலவகையான ஊகங்கள், பல தீர்மான்ங்கள், என்று பலவும் நம்முள் நிரம்பியுள்ளன. நமக்கு சொல்லி கொடுக்கப்பட்டவை, நாமாக கருதிக்கொண்ட்வை, என பலவும் உண்டு. இவற்றையெல்லாம் மீறி எதுவும் நம் மனதில் நுழைய முடிவதில்லை. நமது அபிப்ராயங்களுக்கு மாற்றாக நாம் எதையும் ஏற்பதில்லை. ஞானத்தின் அடிப்படையான நிஜத்தை ஏற்கும் பக்குவம் நம்முள் இருப்பதில்லை.

இறைவ்னை கூட இப்படித்தான் இருப்பார் என்று நம்முள் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விடுகிறோம். அதற்கு முரணான எதையும் ஏற்பதில்லை. ஒருவர் மகான் என்றால் அவரது தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு நாமே முடிவெடுத்து வைத்திருக்கிறோம். அதனாலேயே மாறாக காட்சியளிக்கும் ஞானிகளை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. அதே சமயம் நம் மனதில் உருவகப்படுத்தி வைத்திருக்கும் பிம்பத்தை போலவே தமது தோற்றத்தை அமைத்துக்கொண்ட போலி துறவிகளை வணக்கத்துக்கு உரியவர்களாக ஆகி விடுகின்றனர். பின்னர் நிஜம் தெரியும்போது அடிப்படை தவறான நமது நம்பிக்கையை நாம் குறை கூறாமல் பதிலாக ஆன்மீகம் என்பதே போலிகளின் கூடாரம் என்னும் முடிவுக்கு வந்து விடுகிறோம்

நான் ஒரு திருடன் என்று சொல்லும்போது ஞானி ஒவ்வொருவரும் ஏதாவதொன்றாக இருந்தாகவேண்டும் என்று கூறுகிறார். ஒரு நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் உண்டு. இந்த பூமியில் வாழ்க்கை எனும் நாடகத்தில் நீ திருடன் என்னும் பாத்திரம் ஏற்றுள்ளாய் என்று கூறுகிறார். ஆனால் நாடகத்தில் நடிப்பவன் இது தனக்கு அப்போது அளிக்கப்பட்ட வேடம் என்பதையும் இதுவும் தனக்கு சிறிது காலமே அளிக்கப் பட்டிருக்கிரது என்பதை உணர்ந்துள்ளான்.

ஆனால் வாழ்க்கையில் தனக்கு அளிக்கப்பட்ட இந்த வேட்த்தை மறந்துவிட்டு இதுவே நமது உண்மை நிலை என்று எண்ணி விடுகிறான். உண்மையாக நாம் யார்? என்பது நமக்கு இறுதி வரை தெரிவதில்லை, என்பதுமட்டுமில்லாமல் தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.

சூ..;பி ஞானி நான் யார் என்பதை தெளிவாக உண்ர்ந்தவர்கள். நான் யார் என்பதை அறிந்தவ்ர்கள், நான் ஏற்க தயாராக இருந்தால் மட்டுமே அவர்கள் அளிக்க முன்வருவார்கள்.

ஆன்மீகத்தை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இரண்டாக பிரித்துள்ளனர். கிழக்கு நாடுகளின் ஆன்மீகம், மேற்கு நாடுகளின் ஆன்மீகம்

கிழக்கில் ஆசியாவும், மற்றவையும், மேற்கு நாடுகள் என்பது ஐரோப்பிய நாடுகள்.

மேற்கில் மோசஸ், ஏசு, நபி போன்றோர் தோன்றி சிந்த்தாந்தங்களை பரப்பினர். இங்கே மகாவீர்ர், புத்தர், சங்கர்ர் போன்றோர் அவதரித்து தங்கள் சித்தாந்தங்களை பரப்பினர்.

யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் இவற்றின் அடிப்படையே இறைவன் வேறு, மனிதன் வேறு என இரண்டாக பிரித்து துவைத் தத்துவமாக இருந்தன.

மேற்கின் த்த்துவங்கள் பிரார்த்தனையை வலியுறுத்தின. ஆனால் எதையும் விடும்படி கூறவில்லை.

கிழக்கின் த்த்துவங்கள் தியானத்தை முதன்மை படுத்தின. துறத்தலை அவை வலியுறுத்தின.
புத்தர், மகாவீர்ர், சங்கரர் எல்லோருமே துறந்தவர்கள், அனைத்தையும் துறந்து உண்மையை தேடி கண்டவர்கள்.

கைவல்யம் என்று மகாவீரரும், பரிநிர்வாணம் என்று புத்தரும் குறிப்பிட்ட அந்த இறுதி நிலையை எட்டினார்கள்.
இஸ்லாம் மார்க்கம் என்பதே இறையச்சம் என்று கூறப்படுகிற தொழுகையையும், குரான் ஓதுவதையும் மட்டுமே முக்கியகாக கருதுவதுதான்.

சூட்சுமத்தை உணர்த்தும் சூ..;பி கதைகள் எழுதியவர் குருஜி வாசுதேவ், பதிப்பு. சிக்ஸ்த்சென்ஸ் ப்ப்ளிகேசன்ஸ்., சென்னை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Dec-19, 2:13 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

மேலே