2020

நேரமிருந்தா கொஞ்சம் யோசிச்சுபாரு

உனக்கான என் பாட்ட கொஞ்சம் கேளு

இறக்கப்போகுது இந்த வருடம் பாரு

இறந்தப்பின்னே திரும்பி வருமா கேளு

உலகமெல்லாம் இது பொது நிகழ்வு பாரு

ஊருக்கு ஊரு வித்தியாசப்படும் கேளு

பிறக்கப் போகுது புதுவருடம் பாரு

அது உறக்க கூறும் விசையம் என்ன கேளு

மகிழ்ச்சியை பகிர சொல்லுது பாரு

அது நிரந்தரமா இருக்குமானு கேளு

கடந்துபோன வருடங்களைப் பாரு

எல்லாம் பழங்கதையாகிப் போனதை கேளு

கேட்டு அது சொல்லிடுமா பாரு

சொல்லிவிட்டா தொல்லையிருக்காது கேளு

அது சொல்லிப்போன விசயங்களைப் பாரு

எல்லாமே ரகசியமாதான் இருந்ததுதான் கேளு

சொல்லும்போது மட்டும் கேட்டுகனும் பாரு

போதும் இந்த பாட்டு கேளு

காத்திருக்கும் நட்புக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்துகூறு

எழுதியவர் : நா.சேகர் (31-Dec-19, 10:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 269

மேலே