புதியதை யோசிப்போம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதியதை யோசிப்போம்
நல்ல புத்தகங்களை வாசிப்போம்...

அன்பை நேசிப்போம்
ஆணவத்தை விரட்டிடுவோம்...

தனித்து வாழ்ந்தால்
கண்ணீர் மட்டும் வரும்
கூடிவாழ்ந்தால்
மேககூட்டமும் காதல் மழைபொழியும்

பறவைகள்போல
பறக்க நினைத்திடுங்கள்
கிளிகள் போல பேச நினைத்திடுங்கள்
மயிலைப்போல
ஆடிமகிழ்ந்திடுங்கள்

உண்மையை ஒப்புகொள்ளுங்கள்
சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்
பாசத்தோடு வாழ்ந்துபாருங்கள்
இந்த புத்தாண்டு
உங்கள் ஆத்மாவில்
அகல் விளக்காய்
சுடர்விட காத்துகொண்டிருக்கிறது.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (1-Jan-20, 12:01 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 260

மேலே