புத்தாண்டே 2020

புத்தாண்டே ௨௦௨௦
நலமோடும் வளமோடும்
வலம்வரும் புத்தாண்டு புதுமகளே
நிலமகள் நிம்மதியடைய
நீள்கனவெல்லாம் நிறைவடைய
இதுவரை நடந்ததெல்லாம்
எதுவரை இருந்தாலும்
அதுகுறை கலைந்திடுவோம்
நிறைபெற்று வாழ்ந்திடுவோம்
பிறர்குறைதனை போக்கிடுவோம்
மனிதநேய விதையூன்றி
மனமகிழ்ந்து வாழ்ந்திடுவோம்
அரிச்சுவட்டை அழகாய்
ஆழக்கற்றுத் தந்து
அதனூடே நாம் வளர்ந்து
பாகுபாடில்லா பாரதத்தை
பக்குவமாய் பேணிடுவோம்
வரவேற்போம் புத்தாண்டை
புதிய நல்லெண்ணங்களோடு .

மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (2-Jan-20, 2:59 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 42

மேலே