முதல் மழையும் காதலும்

இது காதலா நட்பா என்றபோதும்
என் மின்மினி பார்வையில்
கண்களின் ஓரம் வழிந்திடும்
இந்த காதல் பெருங்கதைதான்....

மௌனங்களை பேசவிட்டு
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
மனது மிதமிஞ்சிய வெப்பத்திலிருந்து
விடுபட விரும்பாது நெருக்கமாய்
தொடர்ந்தது அவள் அருகாமையை....

ஒருவரையொருவர்
பார்காததுபோல் பார்த்துக்கொண்டோம்
பேசாததுபோல் பேசிக்கொண்டோம்
இருந்தும் பழக முயற்சித்தோம்
எல்லாம் அறிய முற்படும்
குழந்தைகள்போல்.....

அலைகள் நுரையுடன் வந்து
கரையை தொடும் போதெல்லாம்
இதயங்கள் மென் பஞ்சுபோல்
காற்றில் மிதப்பதை உறுதி
செய்துகொண்டோம் முதன்முதலாய்
நிலவாய் கடலில் மிதந்தபடி...

ஒன்றாக பேச முற்படுகையில்
வார்த்தைகள் நேருக்குநேர்
மோதிக்கொள்ள மீண்டும் மீண்டும்
தலையசைத்து சிரித்துகொண்டோம்
வெட்கத்தை மறைக்க விரும்பாமல்...

விடியும் வரை பேச்சின் சுவாரசியம்
குறையாமல் பார்த்துக்கொண்டது
எங்களை மேய்ந்து கொண்டிருந்த
அனைவரின் விழுங்கிவிடக்கூடிய
பார்வைகள் எட்டு திசைகளிலிருந்தும்...

பொழுது புலர தொடங்கியதும்
பெய்யத் தொடங்கிய பெருமழையின்
ஆதிக்கத்தில் பிறந்த புத்தாண்டைபோல்
பேசிப்பழகுவதிலும் தேர்ச்சிபெற்றோம்
குழந்தைகளாய் காதலர்களாய்
எதிர்கால தம்பதிகளாய்............!!!!!!

எழுதியவர் : மேகலை (2-Jan-20, 7:41 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 95

மேலே