தேவதையின் கண்ணுறக்கம்

இரவுக் காம்பின்
கரிய பூவில்
இருள் தேனருந்த இதழ்திறக்கும்
வைகறை வண்டே ..
சற்றே உன் சிறகடிப்பைத்
தாமதப்படுத்து ,
புல்லின் நுனியில் பனிபோலுறங்கும்
என் தேவதையின் கண்ணுறக்கம்
அவள் விழிகளுக்குள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Jan-20, 3:34 pm)
பார்வை : 311

மேலே