பரிசோதனை

கொலுசொலி ஒலிக்க
கொடியிடையாள்
அன்ன நடை நடந்து
அருகில் வந்தமர்ந்தாள்

சின்னக் கண் கொண்டு
சிறிதும் பாராது
புன்னகை மட்டும் சிந்தி
புறமுதுகு காட்டி அமர்ந்தாள்
புத்தகத்தை படித்தபடி

பாராமுகம் ஏனோ என
பரிதவித்தது இந்த
பைத்தியக் காரனின் நெஞ்சம்
பாவையவள் விளம்பினாள்
விளையாட்டாக இன்றொரு
நாள் மட்டும் உனை நான்
பாராதிருக்க முடியுமா என
பரிசோதித்தேன் எனையே
நான் என்று

பாரா முகம் காட்டதே
பைங்கிளியே இவன்
காதல் கிறுக்கனாகி விடுவான்
உன் கண்ணெதிரிலேயே

எழுதியவர் : ஆர் கருப்பசாமி (3-Jan-20, 10:32 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : parisothanai
பார்வை : 66

மேலே