கள்வன்

நண்பகல் வேளையிலே
நல் மகவொன்றை ஈன்றாளென்று
நற்செய்தி தந்தனம்மா
நங்கையிவள் கணவன்

தான் மட்டும் அழுது
தன் ஊறவுகளெல்லாம் மகிழ
தாயின் கருவறை திறந்து
தங்கக் குழந்தையிவன் பிறந்தானம்மா

மழலையிவன் முகம் கண்டு
மனம் மகிழ்ந்ததம்மா
சின்னஞ்சிறுவிழிகள் கண்டு
சிந்தை குளிர்ந்ததம்மா

பிஞ்சு விரல் கண்டு மனம்
பித்தாகி மகிழுதம்மா இவனை
கொஞ்சி மகிழ எந்தன்
நெஞ்சம் துடிக்குதம்மா

அள்ளியெடுத்து அணைத்திட
ஆசை பிரக்குதம்மா
ஆண்டவன் தந்த பரிசு இதுவென மனம்
ஆனந்தக் கூத்தாடி மகிழுதம்மா’’

கண்டு மகிழந்திட
கண்களிரண்டுபோததம்மா இந்தக்
கள்வன் என் மனதைக்
களவாடிக் கொன்டானம்மா

எழுதியவர் : (3-Jan-20, 10:33 pm)
Tanglish : kalvan
பார்வை : 129

மேலே