தமிழ் ஆளும் தமிழனை

தமிழே தரம் கொண்ட தமிழன்
தரணியில் உன்னால்
தமிழன் தாகமே தமிழ்தான்
உரிமையுடன் தமிழன்
விடாக் கொண்டு அலைகின்றான்
அகிலமெங்கும்,
அழியா வரம் கொண்ட
தமிழ் தாயே நிலைகொண்டு நாம் வாழ
ஓன்றுபட்ட தமிழன் குரல் ஓங்கி ஒலித்திட
முழக்கம் மூலை முடுக்கெங்கும்,
உலகே திரண்டிடினும் தயங்காத,
தலைமறையா , தலைமுறை தமிழனன்றோ
தமிழையோ, தமிழனையோ
வரையறுக்க முடியாது தவிக்கின்றன அன்னியங்கள்
தமிழ் எனும் வேரினை வித்திட்ட வள்ளல் எவனோ
அவன் மனம்போல் தமிழ் மொழி
சொரிகின்றதே தேனையும் பாலையும் எமது நாவினால் ,
அள்ளி அள்ளி பருகும் தமிழ்தேனே
உன் இனிமை பெருமை அறியாத அந்நிய மொழிகள்
தமிழனையும் தமிழையும் நசுக்க அரும்பாடு ,
அந்நியம் தலை கவிழ
அந்நிய மொழிகள் தலை தெறிக்க ஓடிட
தமிழனும் தமிழும் அமைதியுடன் வாழ்ந்திட
தமிழா விடை காண விரைந்திடு,
இது விளையாட்டல்ல தமிழ் தேசமே உருவாகும்
நல்ல நேரம் காலம் என்றும் நம்முடன்
தொடர்ந்து செல் உன் இலக்கு உன் கையில்
ரோபர்ட் ப்ரூஸும் சிலந்தியும்
கதை நம் ஞாபகத்தில் எப்போதும்
விடாமுயற்சியுடன் ஓடிக் கொண்டேயிரு
நினைத்தது கிடைக்கும்வரை
இறுதியில் வெற்றி உனதே
தமிழ் ஆளும்தமிழனை

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Jan-20, 12:24 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 452

மேலே