உன் ரகசியங்கள்

நீ ஒன்றை மறைக்க முற்படுகையில்
ஒரு குழந்தையாகிவிடுகிறாய்
உன் கண்களின் மலர்ச்சியும்
திடுமென பிரவாகமெடுக்கும்
படபடப்பும்
குறுஞ்சிரிப்பும்
இன்னும் உன்னை பேரழகாக்குகின்றன..
பிடிவாதத்தின் குறும்போடு
நீ மறைக்க விரும்புவது
இன்னும் அதிகமாக மறைந்துகொள்கிறது..
உன்னிடம் உள்ள ரகசியங்கள்
உன்னைவிட அழகானவை..
நீவெளிப்படுத்தும் தருணம்
ஒருவேளை வெட்கம் கொள்வாயானால் அதனை மறக்காமல்
புகைப்படம் எடுத்துவிடு..
அதனைவிட அழகிய தருணம்
மீண்டும் அமையாவிடில்????
நீ மறைத்து வைக்கும் ரகசியங்கள்
ஒருவேளை
உன் கடந்துபோன ஒரு
காதலைப்பற்றியதாக இருந்தால்
அதனை நீ வெளிப்படுத்தும் தருணம்போல்
ஒரு துயரம் எனக்கு வேறு இருக்கப்போவதில்லை..ஆகையால்
நீ மறைக்கவிரும்புவதை
இன்னும் இறுக்கமாக மறைத்துக்கொள் ..
என் முன்னாள் காதலியே..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (4-Jan-20, 8:53 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 288

மேலே