தமிழில் மகன் என்ற சொல்லுக்கு இத்தனை வேறு சொற்களும் பொருளுமா

தமிழில் மகன் என்ற சொல்லுக்கு பல்வேறு வேறு பெயர்களும் பொருளும் இருக்கின்றன .அதாவது பருவத்திற்கு ஏற்ப வயதுக்கு ஏற்ப அல்லது மகன் எப்படி தன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறான் என்பதை அடிப்படியாக கொண்டு இந்த பெயர்கள் வந்திருக்கலாம் .இந்த அடிப்படை என்ன வீச்சுக்கு கம்பராமாயணம் போன்ற நூல்களில் அடிப்படைகள் உள்ளது .

பாலன் : தனக்கு உரிய வயது வந்தும் தந்தைக்கு என்ன வருவாய் ? எப்படி குடும்பம் நடைபெறுகிறது ?பிற்காலத்தில் நாம் எப்படி வாழ்வது ? என்ற சிந்தனையும் அறிவும் ஆற்றலும் இன்றி தாய் தந்தையர் பாதுகாப்பிலேயே இருக்கின்றவன் பாலன் என்பவன் .

பிள்ளை : வயது முதிர்ந்த தந்தை வேலை செய்ய தனக்கு உரிய பருவம் வந்தும் தந்தைக்கு உதவி செய்யாது மேற்கொண்டு செலவு செய்தி கொண்டும் ,ஆடல் பாடல்களில் ஈடுபட்டுக்கி கொண்டும் இருப்பவன் பிள்ளை

குமாரன் : தங்கத்தைக்கு ஞானம் உரைக்கும் அளவிற்கு உயர்த்த அறிவு பெற்றவன் குமாரன் .

புத்திரன் : தந்தைக்கு நற்கதி தருகின்றவன் புத்திரன் .

புதல்வன் : தந்தைக்கு நன்மையைச் செய்கின்றவன் புதல்வன் .

மகன் : தான் பிறந்த குடும்பத்தை காத்து ஆலமரத்தின் விழுது அந்த மரத்தை தங்குவது போல் நிற்பவன் மகன் .

மைந்தன் : தந்தையின் குடும்பம் ,தாயின் பிறந்த வழி குடும்பம் ,குருவின் குடும்பம் ,நண்பரின் குடும்பம் ,இப்படி பல குடும்பங்களைக் காப்பாற்றுபவன் மைந்தன் .

இராமபிரான் தான் குடும்பம் முழுமையும் காத்து நின்றதால் மகன் எனவும் ,குகன் குடும்பம் ,சுக்ரீவன் குடும்பம் ,விபீடணன் குடும்பம் இப்படி பல குடும்பங்களை காத்ததினால் மைந்தன் எனவும் அழைக்கப் பெற்றார் என துனித்து உணர்தல் வேண்டும் என்று ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கம்பராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார் .

எத்தனை அழகு தமிழ் . சொல்வளமும் பொருள் வளமும் சொரிந்து கிடக்கிறது கேட்பாரின்றி .உய்த்து உணருங்கள் ..

எழுதியவர் : வசிகரன் என்கிற க. சிவகுமா (4-Jan-20, 9:32 pm)
பார்வை : 75

மேலே