இயற்கையே, எழிலே

'எத்தனைக் கோடி இன்பங்கள் வைத்தாய்
இறைவா ' இந்த இயற்கையின் வண்ண வண்ண
எழில் கோலங்களில் ...... பச்சை மரங்களில்
கருநீல மேகங்களோடு உறவாடும் மலைத்தொடர்களில்
இமய மலைத்தொடர்களில் , பாயும் பறவைக்கூடங்களில்
பாடும் பறவைகளின் இனிய கீதங்களில்
சோலைக்குயில் பாட்டில் , கொஞ்சும் சலங்கை
ஒலி தரும் சிற்றோடைகளின் ஓட்டத்தில்
நடந்துவரும் நதியின் கம்பீரத்தில்
நீலக்கடலின் ஓயா அலை ஓசையில்
கொஞ்சும் தென்றல் காற்றின் வீச்சுக்கு
சதிராடும் பசுமை நெல் வயல்களில்
தேவலோகம் இதுவா என்று பார்க்கையில்
பிரமிப்பு ஊட்டும் மலர்ச்சோலையின் எழிலில்
அந்த மலரும் மலர்களின் வாசத்தில் .......

இயற்கையின், கவிதையின் வரிகளுக்கும் அப்பால்
நின்று பரிமளிக்கும் எழிலைக் கண்டுரசித்திட
பொக்கிஷமாம் கண்கள் இரண்டு எமக்களித்தாய்
அந்த இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றிலும்
இயங்கும் இசையை கேட்டு ரசிக்க காதுகள்
இரண்டும் எமக்களித்தாய் இறைவா
உனக்கு என்ன சொல்லி வந்தனம் கூறுவதோ
கவிஞன் நான் ஸ்தம்பித்து நிற்கின்றேன்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (5-Jan-20, 2:58 pm)
பார்வை : 282

மேலே