மேகம்

மேகம்

நீலக் கடலின் நீரைக் குடித்தாய் !
நீண்ட பயணம் செய்துமுடித்தாய் !
உப்பை உதிர்த்து உயர்ந்தது ஆவி
உயரே பறந்து சென்றது கூடி

பகலில் கதிரின் ஒளியை மறைத்தாய் !
பனிகள் மூடும் மலையில் படர்ந்தாய் !
வானில் பலவகை வடிவம் எடுத்தாய் !
வண்ணம் பூசி வானில் சிரித்தாய் !

வெள்ளை நிறத்தில் வானில் விரிந்தாய் !
வெள்ளி மலையாய் வடிவம் எடுத்தாய் !
நிலவுப் பெண்ணை மூடி மறைத்தாய் !
நீந்தும் படகாய் நினைவில் உதித்தாய் !

உலவும் போது உலகை நனைத்தாய் !
உயிர்கள் (வளர) வாழ உருகி விழுந்தாய் !
ஒடும் நதியில் ஒன்று கலந்தாய் !
ஒன்றாய்க் கூடி கடலில் விழுந்தாய் !

சுற்றும் பூமி உந்தன் அன்னை
சுகமும் சோகமும் உந்தன் கருணை.

எழுதியவர் : கவி இராசன் (5-Jan-20, 11:22 pm)
Tanglish : megam
பார்வை : 177

மேலே