நண்பனும் நட்பும்

உறவு என்று சொல்லி உறவாட
வருபவரெல்லாம் உறவினர் ஆவதில்லை
நண்பன் என்று கூறி உள்ளொன்று வைத்து
வெளியொன்று கூறி அலைபவனும்
அவ்வண்ணம் நல்ல நண்பனுமாவதில்லை
நல்ல நட்பில் வாழும் நண்பர்கள்
ஒருவருக்கொருவர் கோப்பெருஞ் சோழனும்
பிசிராந்தையார் போலும்
கண்ணனும் குசேலனும் போலும்
ராமனும் குகனும் போலும் வாழ்பவர்
ஈருடல் ஓருயிராய் வாழ்பவர்
இருவர் இன்ப துன்பத்தில் பகிர்ந்து வாழ்பவர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jan-20, 2:13 pm)
Tanglish : nanbanum natbum
பார்வை : 1225

மேலே