நா நயமா நாணயமா

நா நயமா நாணயமா...
நா நயம் உடையவரைவிட
நாணயம் கொண்டவர்க்கே
நானிலத்தில் நன்மதிப்பு
நாடுபோகும் நிலைகண்டு
நான் வெக்குகிறேன் நானும்
அதில் பயணிப்பதால்
மனிதமுமில்லை மனிதனுமில்லை
புனிதன்கூட புத்தி சலவை
செய்யப்படுகிறான் நாணயத்தால்
உறவுகள் உதாசீனம் செய்கிறது
உணர்வுகளை உருக்குலைக்கிறது
ஆசைமாயையில் அனுதினம் அல்லல்
உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்
உறைந்து போனதோ - அல்ல
மறைந்து போனதோ
அத்திப்பூத்தாற்போல் ஆங்கொன்றும்
இங்கொன்றும் இருப்பினும்
அதிலும் ஆசை கவ்வுகிறது
பணத்தாசை ஆளை கொல்கிறது
பணமே ஆளுமை செய்கிறது
ஆசை தீயை அள்ளிக்குடிப்பதில்
உள்ளானந்தம் அள்ளி கொடுப்பதிலில்லையே
விலங்குகளும் பறவைகளும்
தேவைக்கதிகம் சேர்ப்பதில்லையே
அரைஞாண் கயிறும் வராதபோது
ஏனடா அவஸ்தை அல்லும் பகலும்
பணத்தை சேர்க்க
சற்றேனும் சிந்திப்போம்
சந்ததிகளுக்கு நல்லறிவு போதிப்போம்
நலமுடன் வாழ்வோம்.

விதையாய். . .
மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (7-Jan-20, 2:46 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 79

மேலே