பச்சை நிறம்

பசுமைப் புல்வெளி
பச்சை வயல் வெளிகள்
பச்சைக்கிளிகள் கூட்டம்
பச்சைமா மலைத்தொடர்கள்
தெருவெல்லாம் ஓங்கிவளர்ந்த
நிழல் தரும் பச்சை மரங்கள்
இறைவனார் கற்சிலைக்கும்
பொற்சிலைக்கும் ஆபரணமாம்
பச்சை மாணிக்க கற்கள்
பச்சை வெற்றிலைக்கு கொடிகள்
இப்படி காணும் பொருளிலெல்லாம்
மனதிற்கு இதம் தரும் பச்சை
நிறம் வைத்தான் இறைவன்
அவனும் 'பச்சைமா மலைபோல்
மேனியனே' தான் என்றார் ஆழ்வாரும்
தம் வேதப் பாசுரத்தில் .......
'பச்சை நிறமே, பச்சை நிறமே
எனக்கும் நீ இச்சை நிறமே '
இயற்கையில் பசுமை எல்லாம்
நம் மனதிற்கும் இதயத்திற்கும்
என்றும் நலம் தரும் குளுமை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jan-20, 6:53 am)
Tanglish : pachchai niram
பார்வை : 326

மேலே