காதல் செய்ய வா

அழகான மாலை நேரம்!
கடலோரம் நீயும் நானும்!
விரலோடு விரல்கள் சேரும்!
கரையோரம் கால்கள் நடைபோடும்!

உன் கண்ணங்களை
என் கைகளால் அள்ளி!!
உந்தன் காதோரம்
சில கவிதைகள் சொல்லி!!
காதல் செய்ய வா கண்ணே!

நம் விழியோடு விழிகள்
மொளனமாய் பேசிக் கொள்ளும்!
நம் இருவரின் இதழ்கள்
சாவி இல்லாமல் பூட்டிக் கொள்ளும்!
என் உத்தரவின்றி உன் தலை
என் தோள் மேல் சாய்ந்து கொள்ளும்!

இரு மனம் இணைந்து
கடல் மணலில்
காதல் வீடோன்று கட்டி
ஆனந்தமாய் விளையாடுவோம்
வா அன்பே!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 3:54 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kaadhal seiya vaa
பார்வை : 946

மேலே