தலைமைப் பண்பு

தலைமைப் பண்பு !!

தலைவன் தன்னியல்பு மாறுவதில்லை !!

கதிரவன்மேல் எழுவதைநீ பார்த்தாயானால் - அவனைக்
காலையிலே முன்னெழுந்து தொழுதாயானால்,
உதிரத்தில் அருஞ்சக்தி ஓடிச்சிறக்கும்!! - மக்கள்,
உன்பின்னால் அணிதிரள்வர் தலைவன் நீதான்!!

கதிரவன்நீ எழுவதையே பார்த்தானானால் - அவனின்,
காலையிள்ம் அருள்சக்தி கிடையாதுனக்கு!!
கதிர்காணத் தூங்குபவன் தலைவன் இல்லை - மற்றோர்,
கால்பற்றித் தான்நடக்கும் செம்மறியாடு!!

---- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி,
12 ஜனவரி 2020 - ஞாயிற்றுக் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (12-Jan-20, 12:15 pm)
பார்வை : 134

மேலே