காதல்

உன் சுவாசம் கேட்குமளவிற்கு
அருகாமையில்..
மனம்


உன் நிழலாய் தொடர
விரும்புகிறேன்
நிஜத்தில்..


எதிர்காலம் நீயாய்
செழிக்கட்டும்..
கடந்தகால உதாசீண உரங்களால்..



தேநீரின் இறுதித்துளிகள் மற்றும்
நீ
இழக்க விரும்பாதவை..


உன் கண்மலர்களில்
மகரந்தசேர்க்கை
எவ்வாறு நடைபெறுகிறது???



நிசப்த இரவுகளின்
பெரும்முழக்கம்
உன் நினைவு..


Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (13-Jan-20, 10:42 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : kaadhal
பார்வை : 212

மேலே