தை மகளே வா💥🙏

தை மகளே வா💥

தை மகளே வா
தங்க மகளே வா
தரணி காக்க வா
தமிழ் மகளே வா
குலமகளே வா
எங்கள் ஒற்றுமை
சிறக்க வா

சாதியற்ற சமூகத்தை
உருவாக்க வா
மதபேதமில்லா தேசத்தை
உருவாக்க வா
ஏற்ற தாழ்வு இல்லா
வாழ்க்கையை உருவாக்க வா
சமதர்ம சமுதாயத்தை
உருவாக்க வா

அதிகாரத்தை அடித்து
துரத்த வா
ஆனவத்தை அழிக்க வா
அறியாமையை போக்க வா
அறிஞர் பலரை உருவாக்க வா
வறுமையில் வாடுபவர் பசி போக்க வா

பொறாமையை அடியோடு
பொசுக்க வா
கோபத்தை அடக்க வா
வண்மத்தை வேரோடு பிடுங்க வா
வக்ரத்தை தீயிட்டு கொளுத்த வா

அமைதியை அன்புடன்
கொண்டு வா
சமாதானம் தழைக்க
பண்புடன் வா
மனிதநேயம் பெருக
கருனையுடன் வா
ஏழ்மையை முற்றிலும்
அகற்ற யோசனையுடன் வா
அனைவர் வாழ்வு தனில் என்றும்
அனையா சுடர் விட்டெரியும்
ஒளி தீபம் ஏற்ற வா.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Jan-20, 4:29 pm)
சேர்த்தது : balu
பார்வை : 195

மேலே